Friday, October 28, 2011

கனவில் எழுதப்படும் கதை : ‘சவால் சிறுகதை - 2011’

1

அந்த ஃபோட்டோவைப் பார்த்ததுமே நான் ஆச்சரியப்பட்டேன்.

நேற்று என் கனவில் வந்த அந்த நிகழ்வு போலவே இருந்தது.

அவ்வளவு தத்ரூபமாகவா கிராஃபிக்ஸ் செய்திருப்பார்கள் ...

‘ஒரு செல்போனையும், மேஜையில் கிடக்கும் இரண்டு குறிப்புகள் பிரிண்ட் செய்யப்பட்ட துண்டுத்தாள்களையும் நான் கவனித்துக்கொண்டிருக்கிறேன். அப்போது என் ஃபோனில் விஷ்ணு - இன்ஃபார்மர் என்பவரிடமிருந்து ஒரு அழைப்பு வருகிறது.’

என் கனவில் அந்தக் குறிப்புகள் இவ்வளவு தெளிவாக இல்லை.

அனுப்பியவரின் மின்னஞ்சல் முகவரியை கவனித்தேன்.

எனக்கு பழக்கமில்லாத யாரோ.

Cc-இல் இருந்த மற்றொரு முகவரியும் புதிது.

Subject-இல் பார்த்தால் ‘இன்னுமா புரியவில்லை’, என்றிருந்தது.

Message-இல் ‘ஹலோ’ என்று மட்டும் இருந்தது.

Attachment-இல் இருந்த அந்த ஃபோட்டோவை மீண்டும் ஒரு முறை பார்த்தேன். புதிராகவே இருந்தது.

2

S.P.Gokul, Vishnu மற்றும் நான் மூவரும் அந்த அறையில் சந்தித்தோம்.

“கனவில் நீங்கள் எழுதிக் கொண்டிருக்கும் இந்தக் கதை முடிந்து நீங்கள் விழித்துக் கொள்ளத் தான் அந்த ஃபோட்டோவை உருவாக்கினோம்.”, என்றான் S.P.Gokul

“ஆனால் நீங்கள் இன்னும் எங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறீர்கள்.”, என்றான் Vishnu.

“எந்த ஃபோட்டோ”, என்றேன் நான்.

“அதற்குள் மறந்துவிட்டீர்களா. இதோ ...”, என்றனர் இருவருமே.

அந்த ஃபோட்டோவைப் பார்த்ததுமே நான் ஆச்சரியப்பட்டேன்.

நேற்று என் கனவில் வந்த அந்த நிகழ்வு போலவே இருந்தது.

அவ்வளவு தத்ரூபமாகவா கிராஃபிக்ஸ் செய்திருப்பார்கள் ...

கதை விமர்சனம்

போட்டியில் இரண்டாம் இடத்தைப் பிடித்த கதை இது



10 comments:

இராஜராஜேஸ்வரி said...

கனவில் எழுதப்படும் கதை : ‘சவால் சிறுகதை - 2011’"/

very nice.

இரசிகை said...

:)

NALLAAYIRUKKU.
VAAZHTHUKAL NANDHA SIR!

வெண் புரவி said...

கதை அருமை....வெற்றி பெற வாழ்த்துக்கள்.
அப்படியே என்னோட கதையையும் படிச்சுடுங்க..

http://venpuravi.blogspot.com/2011/10/blog-post_30.html

Nundhaa said...

இராஜராஜேஸ்வரி, இரசிகை, வெண் புரவி - நன்றி

நம்பிக்கைபாண்டியன் said...

சிம்பிள் பெஸ்ட்டாக எழுதி, வெற்றி பெற்றிருக்கிறீர்கள், இரண்டாமிட வெற்றிக்கு இனிய வாழ்த்துக்கள்!

இரசிகை said...

ippothaan theriyum...

vaazhthukal.

:)

Nundhaa said...

இரசிகை - நன்றி

asiya omar said...

வாழ்த்துக்கள்.

ஷைலஜா said...

வாழ்த்துகள் நந்தா.

Nundhaa said...

asiya omar, ஷைலஜா - நன்றி