Wednesday, December 23, 2009

கவிதைகள் எழுதாமல் இருப்பது எப்படி?

அல்லது

இணையம் புனையும் மற்றொரு புதினத்தில் இன்று என் வலையில் சிக்கிக் கிடக்கும் நானும் ஒரு கதாபாத்திரம் ஆகும் கதை - பாகம் மூன்று / நான்கு?

அல்லது

மௌனப்பெருவெளிப் பள்ளத்தாக்கில் தோன்றி மறையும் காலக்குறியின் விஸ்வரூபம்

அல்லது

காலத்துளி உறைந்த பிரம்மவெளியெங்கும் நகரும் சரவெடி இசைநெடி புகைமலர் உலர்பனி

அல்லது

keychain-கள் வடிவமைப்பவனும் கள்ளச்சாவிகள் செய்பவனும்

அல்லது

சிகரெட்டை நிறுத்த சில புதிய எளிய வழிகள் சொல்பவனுக்கு பாதுகாப்பாகத் தண்ணியடிக்கச் சொல்லப்படும் பத்து கட்டளைகள்

அல்லது

தண்டவாளக்கடலில் மிதக்கும் ரயில்படகில் பயணிக்கும் அவதார புருஷர்கள்

அல்லது

ஸ்தலபுராணம் II

அல்லது

Beer ஏப்பம் விடும் நாசிக்கண்கள் பார்க்கும் போதையுலக தேவதை(கள்) சரித்திரம்

அல்லது

சண்டைக்கோழிக்கறி உண்ணும் சர்கரை நோயாளியின் பகல் கனவுகள்

அல்லது

கலவிச்சத்தம் கேட்டு எழும் அண்டை வீட்டாரின் சண்டை புலம்பல்கள்

அல்லது

தலையெழுத்து கணினியில் என உணரும் புணர மறுக்கும் வார்த்தைக் கூட்டத்திலிருந்து புறப்படும் ஒரு சொல்

அல்லது

தலைப்பிடப்படாதது

- நந்தாகுமாரன்

'உரையாடல் : சமூக கலை இலக்கிய அமைப்பு' நடத்தும் கவிதை போட்டிக்காக எழுதப்பட்டது.



30 comments:

D.R.Ashok said...

என்ன ஆச்சு?

kamalesh said...

யாருடன் கோபமோ...
ஆனால் வெளிப்பாடு நன்றாக இருக்கிறது...

சேரல் said...

அங்க இங்க தாவிக் குதிச்சு முட்டி மோதி...எட்டி எகிறி....ஒரு மாதிரி நல்லா இருக்கு ;௦௦)

-ப்ரியமுடன்
சேரல்

மண்குதிரை said...

ரொம்ப நாள் கழிச்சு

நல்லா இருக்கு

நிலாரசிகன் said...

Pin Navinathuva Kavithaiya? :)

Karthikeyan G said...

Sir, ரெம்ப நல்லா இருக்கு.. Congrats!!

நேசமித்ரன் said...

நல்லா இருக்கு

பா.ராஜாராம் said...

வாவ்!

ரொம்ப பிடிச்சிருக்கு நந்தாகுமாரன்! :-)

வெற்றி பெற வாழ்த்துக்கள்!வெற்றி பெறனும் பாஸ்..

Vidhoosh said...

உங்கள் கவிதைத் தொகுப்பை நீங்களே வெளியிட்டுடீங்களா..

இல்லை, இதில் எதை மீள் பதிவு செய்து போட்டிக்கு அனுப்பலாம்னு கேக்கறீங்களா..

உங்கள் டிராகுலா மட்டும் மிஸ்ஸிங்..

இந்த பின்னூட்டத்தை ஈமெயில்லில் அனுப்பலாமா இங்கேயே வெளியிடவா?

நல்லாருக்குன்னு வேற சொல்லிட்டாங்க எல்லாரும்.

இது மாதிரியே எழுதிட்டு இருங்க. ;) பின்நவீனத்துவம் அப்டீன்னு பரிசும் கொடுத்துடப் போறாங்க. என்ன பரிசு கொடுப்பது பைத்தியக்காரன் இல்லையா. (சிவராமன் மன்னிக்க)
--வித்யா

Vidhoosh said...

அப்புறம் கூரை ஏறி கோழி பிடித்த கதை என்னங்க ஆச்சு?

Vidhoosh said...

சரி. அப்படியே வெற்றி பெற வாழ்த்துக்களயும் சொல்லிகிறேன் குருநாதா.

Vidhoosh said...

அதோட "happy new year"

D.R.Ashok said...

வாழ்த்துகள் நந்தா... ரொம்ப நல்லாயிருக்கு... நேத்து 6வது ரவுண்டில் படித்ததால்... ஒன்னும் :)

ஸ்தலபுராணம்’ இப்ப நான் எழுதிட்டுயிருக்கற கவிதையில வருது அத வேற மாத்தனும்

வெங்கிராஜா | Venkiraja said...

//அப்புறம் கூரை ஏறி கோழி பிடித்த கதை என்னங்க ஆச்சு?//

"

சிவப்ரியன் said...

மறுபடி, மீண்டும் படித்த போது, கொஞ்சம் புரிஞ்ச மாதிரி,..
அல்லது
கண்டிப்பா கவிதையா தான் இருக்கணும்.
அல்லது
பின்னூட்டம் அல்லது வாழ்த்துக்கள்.

அல்லது அல்லாதது அல்லதும் - அல்லதாய்
அல்லது அறியப்படும்.

Nundhaa said...

D.R.Ashok - வாங்க, இதுவரைக்கும் ஒண்ணும் ஆகலைங்க அதான் :)

kamalesh - எனக்கு நிறைய கோபம் இருக்கிறது தான் ... ஆனால் இந்தக் கவிதையில் அந்தக் கோபம் இல்லை ... நன்றி

சேரல், மண்குதிரை - நன்றி

நிலாரசிகன் - அப்படித்தான் வைத்துக் கொள்ளுங்களேன் :)

நேசமித்ரன் - நன்றி

Karthikeyan G, பா.ராஜாராம் - மிக்க நன்றி

Vidhoosh - கவிதைத் தொகுதி என்றே ஒரு கவிதையை முன்பே எழுதியிருக்கிறேன் ... அதுக்கு இப்ப என்னங்கறீங்க :) அட ஆமாம் கூரை கோழி கதையை தொடரனும் இல்லே :) நன்றி and wish you the same

D.R.Ashok - மறுபடி வாங்க, 6வது ரவுண்டுக்கு நிறைய புரிஞ்சிருக்கணுமே ... பரவாயில்லை விடுங்க ... மிக்க நன்றி

வெங்கி - வாங்க ... கூரை கோழி கதையின் அடுத்த பாகத்தை எழுதிட வேண்டியது தான் போல :)

சிவப்பிரியன் - :) நன்றி

இந்தக் கவிதை வடிவ ரீதியிலான (in way of titles as tweets) ஒரு experimental முயற்சி ... :)

தியாவின் பேனா said...

அருமையான கவிதை
நல்ல நடை
வெற்றிபெற வாழ்த்துகிறேன்.

யாத்ரா said...

ரொம்பப் பிடிச்சிருக்கு நந்தா, ரொம்ப ரொம்ப ரசிச்சிப் படிச்சேன், வாழ்த்துகள்.

Nundhaa said...

தியாவின் பேனா, யாத்ரா - மிக்க நன்றி

thenammailakshmanan said...

மிக அருமை வெற்றி பெற வாழ்த்துகிறேன்

சக்தியின் மனம் said...

கவிதை நல்லா இருக்கு

Nundhaa said...

thenammailakshmanan, சக்தியின் மனம் - நன்றி

"உழவன்" "Uzhavan" said...

பரிசு பெற்றமைக்கு வாழ்த்துகள்!

அன்புடன்
உழவன்

பா.ராஜாராம் said...

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் நந்தா! :-)

சேரல் said...

வெற்றி பெற்றமைக்கு வாழ்த்துகள் நந்தா!

-ப்ரியமுடன்
சேரல்

Mohan said...

வாழ்த்துகள் நந்தா!

spiritual said...

hello sir this is my blog kindly help me to promote

http://sriramanandaguruji.blogspot.com/

Nundhaa said...

"உழவன்" "Uzhavan", பா.ராஜாராம், சேரல், Mohan - நன்றி

உஜிலாதேவி said...

நல்லா இருக்கு

Nundhaa said...

உஜிலாதேவி - மிக்க நன்றி