Thursday, July 9, 2009

µP பதிப்பிக்கப்பட்ட மூளை சொல்லும் போன ஜென்மத்துக் கதைகள்

நேற்று நிகழ்ந்தது போல இருக்கிறது எனத் துவங்கும் உரையாடல்களைத் தொகுத்துக் கொண்டிருக்கிறான் பாதங்கள் சுவடுகளைப் பிரியும் பொழுதுகளின் மென்வலி உணராது

அனைத்து காதுகளையும் நான் வணங்குகிறேன் என்ற வாக்கியம் சிறுகதையாகாது என வாதிட்டுப் பாருங்கள் முடிந்தால் என்னிடம்

காதல் உங்களுக்கு உங்கள் virtual memoryஇல் சேமிக்கப்பட்டிருக்கிறது என்ற உண்மை நீங்கள் சொல்லித் தான் எனக்குத் தெரிந்தது. அது தான் உண்மை என்று நீங்களே சொன்னதாலும் அது உங்களைப் பற்றியதாலும் எனக்கு நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.

Metamorphosis என்ற சொல்லின் தமிழாக்கமே ஒரு metamorphosis என்கிறான் அவன். அவனை என்ன செய்யலாம்.

காமம் ஒரு குற்றம்தான். அந்தத் தவறைச் செய்யுங்கள். ‘தப்புப் பண்ணுனா சாமி வந்து கண்ணக் குத்தும்’. குத்தட்டும். ரெண்டு கண்ணையும் குத்தட்டும்.அப்போது தான் நம் மூன்றாவது கண் திறக்கும். என்ன சொல்கிறீர்கள்.

அதோ அங்கே நிர்வாணமாகத் திரியும் அந்தப் பைத்தியக்காரப் பிச்சைக்காரனின் சரித்திரம் தெரியுமா உனக்கு என்று கேட்டான். அவசரமாக ஓடிப்போய் கண்ணாடியில் என்னைப் பார்த்தேன். வெட்கமாக இருந்தது. உடனே உடுத்திக் கொண்டு நிம்மதியானேன் என் சரித்திரம் மறந்து. தீடீரென்று, கேட்டவன் தலைக்குப் பின் ஒளிவட்டம் தோன்ற சட்டென்று ஓடிப்போய் சூரியனில் குதித்து ஆவியானேன்.

காதலுக்கும் இதயத்திற்கும் என்ன சம்மந்தம் எனக் கேட்கும் அறிவாளிகளுக்கு ஜென் சொல்லும் பதில் தான் எனக்கு திருப்தி அளிக்கிறது. உங்களுக்கு எப்படியோ.

சாகடிக்க

செத்துப் போனவன் மீண்டும் வருவான் செத்துப்போக.

நாளை வேறு நாள் என்ற தலைப்பில் அவன் எழுதிக் கொண்டிருக்கும் எதிர் புனைவு யாருக்கும் எதற்கும் எதிரானது அல்ல

18 comments:

kartin said...

//Metamorphosis என்ற சொல்லின் தமிழாக்கமே ஒரு metamorphosis என்கிறான் அவன். அவனை என்ன செய்யலாம்//

.....thoughts ultimatum!! மிளிர்கிறீர்கள் :)

நேசமித்ரன் said...

Outstanding !

பிரம்மராஜனின் "ஜென் மயில் " கவிதை ஏனோ ஞாபகத்துக்கு வந்து போனது...!
:)

நேசமித்ரன் said...

Die Verwandlung

-பிரான்சிஸ் காப்கா 'வை நினைவுறுத்துகிறது

Keep kicking !

பிரவின்ஸ்கா said...

//Metamorphosis என்ற சொல்லின் தமிழாக்கமே ஒரு metamorphosis என்கிறான் அவன். அவனை என்ன செய்யலாம்.//

நல்லாருக்கு.

-ப்ரியமுடன்
பிரவின்ஸ்கா

Vidhoosh said...

! ? (அதாவது இப்படி! எப்படி?)
நல்லாருக்கு.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

கதை பிடிச்சிருக்குங்க. ஆனா நீங்க எழுதப் போற எதிர் புனைவு யாருக்கான எதிர் புனைவுன்னு எனக்குத் தெரியும் :)

வெங்கிராஜா said...

Super!
edhuvum solla thOnRavillai. Post-Modernism-la puthu parimaanam ithellAm. Bannerghatta padangaLai edhirnokkugiREn.

ச.முத்துவேல் said...

/பாதங்கள் சுவடுகளைப் பிரியும் பொழுதுகளின் மென்வலி/

எப்புடி !இப்படில்லாம்.
உங்க எழுத்துகள் பற்றிய ஒரு புரிதலுக்கு இப் பதிவு(க-வி-தைகள்) உதவுகிறது.

Karthikeyan G said...

fine sir!!

seidhivalaiyam.in said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை எங்களது தமிழ் இணையமான www.seidhivalaiyam.inல் பதித்துள்ளோம். அதை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பதித்துக்கொள்ள இந்த தமிழ் இணையத்தில் தங்களை பதிவு செய்து கொள்ளவும்.

நட்புடன்
செய்திவளையம் குழுவிநர்

"அகநாழிகை" said...

நந்தா,
நான் ஏற்கனவே கூறியதுதான்.
உங்களுடையது எவருடையது போலவும் அற்ற தனித்துவ மொழி நடை.
தொடருங்கள்.

‘அகநாழிகை‘
பொன்.வாசுதேவன்

யாத்ரா said...

அருமை அருமை :)

\\ஆனா நீங்க எழுதப் போற எதிர் புனைவு யாருக்கான எதிர் புனைவுன்னு எனக்குத் தெரியும் :)\\


:)

ஜெகநாதன் said...

தலைப்பைப் பாத்தா ​டெர்மினேட்டர் சால்வேஷன் எபக்ட்ல இருக்கு!
சாமி கண்ணைக் குத்தி 3வது கண் திறக்கிறது... பின்றேள்.. பின்றேள்..!!

Nundhaa said...

கார்த்தி, நேசமித்ரன், பிரவின்ஸ்கா, விதூஷ் - நன்றி

ஜ்யோவ் - :) - நன்றி

வெங்கி, முத்து, கார்த்தி - நன்றி

seidhivalaiyam.in - நன்றி

வாசு, யாத்ரா, ஜெகநாதன் - நன்றி

♫சோம்பேறி♫ said...

எக்ஸலண்ட் நந்தா.. இதையே மடக்கி மடக்கி எழுதியிருந்தால் அழகான பத்து கவிதைகள் கிடைத்திருக்குமே என்று பின்னூட்ட நினைத்தேன்.

பிறகு தான் லேபிளைப் பார்த்தேன்.. சூப்பர்ப் கவிதைகள்..

Nundhaa said...

சோம்பேறி - மிக்க நன்றி

அனுஜன்யா said...

வாவ், ரொம்ப நல்லா வந்திருக்கு நந்தா. Awesome.

அனுஜன்யா

Nundhaa said...

அனுஜன்யா - மிக்க நன்றி